×

உதயநிதி ஸ்டாலின் 5 இடங்களில் பிரசாரம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 22:மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் கவுதமசிகாமணியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி நடிகர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிக்க 5 இடங்களில் நாளை (23ம்தேதி) சனிக்கிழமை அன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதாவது கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியானது சின்னசேலம் காந்திபொதுமேடை பிற்பகல் 12 மணி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை அருகில் மாலை 3 மணி, சங்கராபுரம் அண்ணா சிலை அருகில் மாலை 5 மணி. பகண்டை கூட்ரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இரவு 7 மணி, மணலூர்பேட்டை பகுதியில் இரவு 8 மணி ஆகிய 5 இடங்களில் உதயநிதி ஸ்டாலின் வேனில் நின்றபடியே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார். எனவே மேற்கண்ட இடங்களில் வாக்கு சேகரிக்க வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வாரீர் என விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Udhayanidhi Stalin ,places ,
× RELATED மொழி, கல்வி, நிதி உரிமைகளை மீட்டெடுக்க...