×

ஐஎப்இடி பொறியியல் கல்லூரியில் மாநாடு

விழுப்புரம், மார்ச் 22:  விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் ஐஎப்இடி பொறியியல் கல்லூரியில் டீப் லேர்னிங் மெடிக்கல் அப்ளிகேஷன்ஸ் என்ற தலைப்பில் சுகாதார ஆராய்ச்சி துறை நிதியுதவி பெற்று கணினி அறிவியல் துறை சார்பில் தேசிய மாநாடு நடந்தது. சிறப்பு விருந்தினராக ஐஐடி வாரணாசி, உதவி பேராசிரியர் சுகோமல்பால் கலந்துகொண்டு, மாணவர்களின் எண்ணற்ற படைப்புகளை பார்வையிட்டார். மேலும், மாணவர்களின் ஆராய்ச்சி படைப்புகளில் உள்ள நிறை, குறை மற்றும் அதனை மேம்படுத்தும் விதம் குறித்தும் எடுத்துரைத்தார். இதில், கல்லூரி தலைவர் ராஜா, துணைத்தலைவர் முகமது இலியாஸ், செயலாளர் ஷிவ்ராம் ஆல்வா, முதல்வர் மகேந்திரன், கல்வியியல் புலத்தலைவர் மெட்டில்டா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி புலத்தலைவர் ஆஷா, கணினி அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியை கனிமொழி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திவ்யா, துணை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தை சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags : Conference ,IED Engineering College ,
× RELATED காஷ்மீர் மற்றும் லடாக்கில் தொகுதி...