×

ரொக்க பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்

விக்கிரவாண்டி, மார்ச் 22: விக்கிரவாண்டி டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுரேஷ் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், ஏட்டு சக்திவேல், பிரேம்நாத், முத்து சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் சோதனை  செய்தபோது பஸ்சில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேலூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சகாதேவன்(55) என்பவர் வைத்து இருந்து ரூ.1லட்சத்து 10 ஆயிரத்தை எவ்வித ஆவணமும் இல்லாததால் பறிமுதல் செய்தனர். அதேபோல், டோல்கேட் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் நாகராஜன் தலைமையில் ஏட்டுக்கள் ரமேஷ்குமார், தட்சணாமூர்த்தி, லட்சுமணன் ஆகியோர் திருச்சி நோக்கி சென்ற மினி லாரியை சோதனை செய்தபோது, முறையான ஆவணங்கள் இன்றி திருநெல்வேலிக்கு ஏற்றிச் செல்லப்பட்ட சில்வர் பாத்திர பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் என கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் மற்றும் மினி லாரியில் உள்ள சில்வர் பொருட்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன், விக்கிரவாண்டி தாசில்தார் சுந்தர்ராஜன், மண்டல துணை தாசில்தார் பாண்டியன்  ஆகியோரிடம்  ஒப்படைத்தனர் ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் விழுப்புரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை