×

குறைவான தண்ணீர் பயன்படுத்தும் கழிப்பறைகள்

கடலூர், மார்ச் 22:  சிஎஸ்டி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சிஎஸ்டி தொண்டு நிறுவனம் தண்ணீரை மையமாக வைத்து நீடித்த நிலையான சுகாதாரத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மனிதனின் அன்றாட நீரின் தேவையில் சுமார் நான்கில் ஒருபகுதி கழிப்பறையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர் முற்றிலும் கழிவுநீராக வெளியேறி நிலத்தடியில் கழிவு நீராகவே கலக்கிறது. இந்த கழிவுநீர் பூமியில் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனால் நமக்கு மாசுபட்ட நிலத்தடி நீர் கிடைக்கிறது. தூய்மையில்லாத நீரால் நமக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிஎஸ்டி தொண்டு நிறுவனம் அரசோடு சேர்ந்து கட்டிய குறைவான தண்ணீர் பயன்படுத்தப்படும் ஈக்கோ சான் கழிப்பறைகள் அமைத்து தந்து வருகிறது. இதன்மூலம் சராசரியாக ஒரு குடும்பம் தினந்தோறும் சுமார் 50 லிட்டர் தண்ணீரையும் நாளொன்றுக்கு நபரொன்றுக்கு சுமார் 10 லிட்டர் வீதம் மொத்தமாக தினந்தோறும் 28,000 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்
படுகிறது.

இதுபோன்று மற்றொரு திட்டமான டீவாட்ஸ் பொது கழிப்பறையில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு மறுபயன்பாடு செய்ய முடியும். இப்படி சிஎஸ்டி நிறுவனம் இதுவரை 22 டீவாட்ஸ் பொது கழிப்பறைகள் தேனி மாவட்டத்தில் கட்டி பயன்படுத்தி வருகிறது. இதன்மூலம் நாளொன்றுக்கு 42 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு மறுபயன்பாட்டுக்கு பயன்படுகிறது. இப்படி நம்முடைய மொத்த தண்ணீர் தேவையில் நான்கில் ஒருபகுதி கழிப்பறையால் வீணாகாமல் மாற்றிவிட்டால் பெருமளவில் தண்ணீர் சேமிக்கப்படும் என்பதே எங்கள் நிறுவனத்தின் பிரத்யேகமான நோக்கம், இவ்வாறு கூறியுள்ளார்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு