×

சங்கரன்கோவிலில் அதிமுக கூட்டணி கட்சியினரின் தேர்தல் ஆலோசனை கூட்டம்

சங்கரன்கோவில், மார்ச் 22: சங்கரன்கோவிலில் இன்று அதிமுக கூட்டணி கட்சியினரின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து அமைச்சர் ராஜலட்சுமி கூறியதாவது: தமிழகம் முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தென்காசி பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (22ம்தேதி) காலை 10 மணிக்கு அதிமுக கூட்டணி கட்சியினர் சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ, தேமுதிக, பாமக, புதிய தமிழகம், தமாகா, புதியநீதி கட்சி உள்ளிட்ட கட்சியினரின் ஆதரவோடு வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது. இதில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்பி, நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மனோஜ்பாண்டியன், மற்றும் எம்பிகள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏகள், முன்னாள் எம்பிக்கள், அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள், நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் திரளாக பங்கேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு சங்கரன்கோவில்-கழுகுமலை சாலையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட உள்ளது. இதிலும் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags : Election meeting ,AIADMK ,Sankarankoil ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...