×

சங்கரன்கோவிலில் அறிமுக கூட்டம் தென்காசி மக்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்க பாடுபடுவேன்

சங்கரன்கோவில், மார்ச்22: தென்காசி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக ராஜபாளையம் அருகே தேவதானத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தனுஷ்கோடி மகன் தனுஷ். எம்.குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 28 ஆண்டுகள் கழித்து திமுக நேரடியாக தென்காசியில் போட்டியிடுவதால் திமுக தொண்டர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். நேற்று சங்கரன்கோவிலில் தென்காசி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கவேல், மாவட்ட அவைத்தலைவர் முத்துபாண்டியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சுப்பையா, தொழிலதிபர் அய்யாத்துரைபாண்டியன், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், நகர காங்கிரஸ் தலைவர் உமாசங்கர், பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் குருசாமி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், வேட்பாளர் தனுஷ். எம்.குமாரை அறிமுகபடுத்தி பேசினார். தொடர்ந்து வேட்பாளர் தனுஷ். எம்.குமார் பேசியதாவது, கடந்த 28 ஆண்டுகளுக்கு பின்னர் தென்காசியில் திமுக நேரடியாக போட்டியிடும் நிலையில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று இனிவரும் காலங்களில் திமுக தொடர்ந்து வெற்றி பெற செய்யவேண்டும் என்ற இலக்குடன் பணிபுரிவேன். நான் வெற்றி பெற்றால் இத்தொகுதி மக்களின் அனைத்து வகையான பிரச்சனைகளையும் தீர்க்க பாடுபடுவேன் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் ராஜதுரை, பொதுக்குழு உறுப்பினர் கணேசன், வர்த்தக அணி அண்ணாவியப்பன், முனியசாமி, தகவல்தொழில்நுட்ப பிரிவு குமார், ராஜ், பொறியாளர் அணி சங்கர், நெசவாளர் அணி மாரிச்சாமி, மாவட்ட பிரதிநிதி சேனா, வக்கீல்கள் முத்துராமலிங்கம், கண்ணன், இளைஞரணி பிரகாஷ், சரவணன், கார்த்திக், தொண்டரணி காளிச்சாமி மற்றும் திமுக, மதிமுக, விடுதலைசிறுத்தைகள், இந்தியகம்யூனிஸ்ட், முஸ்லிம்லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் சங்கரன் நன்றி கூறினார்.  முன்னதாக வேட்பாளர் தனுஷ். எம்.குமார் விடுதலைசிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர்மைதீன் மற்றும் கட்சியினரை தனியார் விடுதியில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Tags : meeting ,Sankarankovil ,Tenkasi ,
× RELATED சங்கரன்கோவிலில் போலீஸ் தாக்கியதில்...