×

கடையநல்லூர் அய்யனார் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

கடையநல்லூர், மார்ச் 22: மேலக்கடையநல்லூர் பூர்ணபுஷ்கலா சமேத மாடக்குளத்து அய்யனார் கோயிலில் இன்று  கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு 20ம் தேதி மகா கணபதி ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, மாலை தீர்த்தசங்கிரஹணம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. 21ம் தேதி விசேடசந்தி, 2ம் கால யாகசாலை பூஜை, திருமுறை பாராயணம், ஆசீர்வாதம், மூன்றாம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி இரவு  யந்த்ர ஸ்தாபனம், அஷ்டபந்தன ஸமர்பணம் நடந்தது. கும்பாபிஷேக நாளான இன்று  22ம் தேதி காலை 4.30 மணிக்கு மேல் பிம்பசுத்தி, மூர்த்திகளுக்கு ரக்ஷாபந்தனம், 4ம் யாகசாலை பூஜை, ஸ்பர்ஷாஹூதி, நாடிசந்தானம், மஹாபூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து காலை 6.25 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் விமான கோபுரஅபிஷேகம், மாடக்குளத்து அய்யனார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 10 மணிக்கு மேல் மஹாஅபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம், தீபாராதனை நடக்கிறது.  கும்பாபிஷேக பூஜைகளை கீழஆம்பூர் சங்கரசுப்பிரமணிய குருக்கள், குற்றாலம் குடியிருப்பு ராமநாதகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைக்கின்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Kadayanallur Ayyanar ,
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது