×

செண்பகாதேவி அம்மன் கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

தென்காசி, மார்ச் 22: குற்றாலம் மலை மீது அமைந்துள்ள குற்றாலநாதசுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட செண்பகாதேவி அம்மன் கோயிலில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அகஸ்தியர் அமர்ந்த புண்ணிய மலையில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் செண்பகாதேவி அம்மன் மற்றும் அகஸ்தியருக்கு பல்வேறு வகையான மூலிகை அபிஷேகங்கள் மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தது. முன்னதாக கோயிலில் நூற்றுக்கணக்கான அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. பூஜைகளை அகஸ்தியர் சன்மார்க்க சபை முத்துக்குமாரசாமி நடத்தினார். பூஜையின் போது அகஸ்தியர் முன்பு ஏற்றப்பட்ட தீபத்தில் 5 தலை நாகம் போல உருவம் தெரிந்ததாக கூறப்படுகிறது. இதில் சாது செண்பகசாமி, இலஞ்சி சண்முகசுந்தரம், அம்பிகா, குழல்வாய்மொழி கோமு மற்றும் பெங்களுரை சேர்ந்த நீதிபதி ராகு உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் செல்வகுமாரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : pooja ,Shenbagadevi Amman ,
× RELATED சுந்தரேஷ்வர சுவாமி கோயில்...