×

திருவெள்ளரை பெருமாள் கோயிலில் அடைக்கப்பட்ட வடக்கு வாசல் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி

மண்ணச்சநல்லூர், மார்ச் 22:  திருவெள்ளரை புண்டரீகாட்ஷப் பெருமாள் கோயிலில் ராஜகோபுரம் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதாக கூறி அடைக்கப்பட்டிருந்த வடக்குவாசல் நேற்று மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரங்கம் ரங்கநாதர் கோயிலின் சார்பு கோயில்களில் ஒன்று திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த கோயிலின் வடக்கு வாசலில் உள்ள ராஜகோபுரம் முற்றுப்பெறாமல் உள்ளதால் ராஜகோபுரத்தை கட்டுவதற்கு அறநிலையத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. கடந்த 24.2.2017 அன்று முதல் ராஜகோபுர பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது. பணிகள் நடைபெறுவதை காரணம் கூறி வடக்குவாசல் அடைக்கப்பட்டது.

கடந்த பல மாதங்களாக வடக்கு வாசல் அடைக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் திருவெள்ளரை கோயிலில் தேர்திருவிழா தொடங்க இருக்கும் சூழ்நிலையில் வடக்குவாசல் திறக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் ராஜகோபுரத்தில் கல்கார பணிகள் முடிவுற்றது என்று கூறி வடக்குவாசல் நேற்று திறக்கப்பட்டது. இதனால் 18ம் படி கருப்பு சாமியையும் பக்தர்கள் கும்பிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு வாசல் திறக்கப்பட்டதால் இனி ஐதீகப்படி பெருமாளை தரிசிக்க முடியும் என்று பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராஜகோபுரம் கட்டுமானப்பணிகள் நடைபெறாத நிலையில் மீண்டும் வடக்கு வாசலை அடைக்கக்கூடாது என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : opening ,gate ,Tiruvallur Perumal ,devotees ,
× RELATED மாயனூர் ரயில்வே கேட் அருகே வாகனங்கள்...