தெலங்கானா சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் திட்டத்திற்கு திருச்சி பெல் நிறுவனம் 100வது எரிப்பான் பலகை அனுப்பி வைப்பு

திருச்சி, மார்ச் 22:  தெலங்கானா சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் திட்டத்திற்கு திருச்சி பெல் நிறுவனம் 100வது எரிப்பான் பலகை அனுப்பி வைத்தது.

 பெல் குழுமம், தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம் ராமகுண்டத்தில், என்டிபிசி நிறுவனத்திற்காக அமைத்து வரும் 800 மெகாவாட் சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின்னாலைக்கான எரிப்பான் பலகை திருச்சி பெல்லில் இருந்து அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெல் திருச்சி, மின்னாலைக் குழாய்கள் பிரிவு திருமயம் மற்றும் குழாய்கள் மையம் சென்னை ஆகியவற்றின் செயலாண்மை இயக்குநர் ராஜாமனோகர் என்டிபிசி  மற்றும் பெல் மூத்த அலுவலர்கள் முன்னிலையில் பெல் திருச்சியின் உயரழுத்தக் கொதிகலன் ஆலை, பிரிவு 2லிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

20.5 மீட்டர் நீளமும், 12 டன் எடையும் கொண்ட இந்த எரிப்பான் பலகை, எரிஉலைகளில் எரிப்பானை அணுக வழிதரும் ஒரு சிறப்பான மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட நீர்ச்சுவர் பலகையாகும். இதில் பேசிய ராஜாமனோகர் நூறாவது எரிப்பான பலகையை  30 நாட்களில் தயாரித்து வழங்கியுள்ளது சுழற்சி நேரக்குறைப்பில் ஒரு புதிய சாதனை என தெரிவித்தார். நிகழ்ச்சியில், கொதிகலன் ஆலைகள் 1 மற்றும் 2-ன் பொதுமேலாளர் கமலக்கண்ணன் , வணிகம், சந்தைப்படுத்துதல், திட்டமிடல் மற்றும் அனுப்புகைக்கான பொதுமேலாளரிடம் அனுப்புகைக்கான ஆவணங்களை வழங்கினார்.

Related Stories: