தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

லால்குடி, மார்ச் 22: லால்குடிசட்ட மனற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. லால்குடி பேருந்து நிலையத்தில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நேற்று விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பாலாஜி தலைமை வகித்தார். கண்ணியத்துடன் வாக்களிப்பது குறித்து பேனர்கள் அமைத்தும், நிலையங்களில் நின்ற பொது மக்களிடம் துண்டுபிரசுரங்கள் விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லோடு வேனை மறித்து காஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும், வியாபார கடைகள் மற்றும் பேருந்துகளில் 100 சதவீதம் வாக்களிக்ககோரி விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டினர்.

இதில் லால்குடி தாசில்தார் சத்திய பாலகங்காதரன், லால்குடி பேருராட்சி செயல் அலுவலர் குமரன், தேர்தல்பிரிவு துணை தாசில்தார் மோகன், லால்குடி மண்டல துணை தாசில்தார் ஆனந்தகுமார், பூவாளூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜவஹர், துப்புரவு ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் வருவாய் அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து புள்ளம்பாடி பேரூராட்சி பகுதியில் பஸ் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது.

Related Stories: