×

திருவெறும்பூர் பகுதியில் நவீன சமத்துவ சுடுகாடு அமைக்க வலியுறுத்தல்

திருவெறும்பூர், மார்ச் 22:  திருவெறும்பூர் பகுதி மக்களுக்கு நவீன மயமாக்கப்பட்ட சமத்துவ சுடுகாடு மற்றும் இடுகாடு அமைத்து தரவேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது. இதில் 64 மற்றும் 65வது வார்டுகள் திருவெறும்பூர் மற்றும் கூத்தைப்பார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளாகும். இந்த இரண்டு வார்டுகளிலும் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பல்வேறு மதம் மற்றும் சாதியினர் உள்ளனர். பல தரப்பட்டவர்கள் உள்ள திருவெறும்பூர் பகுதியில் மக்கள் இறந்த பிறகு எரியூட்டுவதற்கோ அல்லது புதைப்பதற்கோ சமத்துவ சுடுகாடோ அல்லது இடுகாடோ இல்லை.

அவர்களை கூத்தைப்பார் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட உய்யகொண்டான் வாய்க்கால் கரை சாலையில்தான் புதைப்பதும், எரிப்பதுமாக உள்ளனர்.அதனால் அவர்களுக்கு என ஒரு சமத்துவ சுடுகாடு மற்றும் இடுகாடு வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணி அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளதாக கூறினார். மேலும் திருவெறும்பூரில் அனைத்து தரப்பு மக்களும் உள்ளதால் அவர்களுக்கு என ஒரு நவீன சமத்துவ சுடுகாடு மற்றும் இடுகாடு அமைத்து தரவேண்டும் என மேலும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : area ,Tiruvarur ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...