ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று பங்குனி தேரோட்டம்

மண்ணச்சநல்லூர், மார்ச் 22:  108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் சிறப்பும் வாய்ந்தது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். அரங்கனுக்கு ஆண்டுதோறும் உற்சவ நாட்கள் தான். அவற்றில் முக்கிமான ஒன்று பங்குனி தேர் திருவிழா. இவ்வாண்டு பங்குனி தேர் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நம்பெருமாள் சேஷ வாகனம், கற்பக விருட்சம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்தார். கடந்த 16ம் தேதி கருட சேவை நடைபெற்றது. விழாவில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Related Stories: