விளாத்திகுளம் தொகுதி தலித் விடுதலை இயக்க வேட்பாளர் அறிவிப்பு

கோவில்பட்டி, மார்ச் 22: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தலித் விடுதலை இயக்கம் சார்பில் தாவீதுராஜா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கோவில்பட்டியில் தலித் விடுதலை இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இயக்க செயலாளர் ராஜ் தலைமை வகித்தார். மகளிரணி செயலாளர் கனி முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் ரவி வரவேற்றார். தலித் விடுதலை இயக்க தலைவர் தலித் பெரியசாமி பேசினார். அணி தலைவர் தாவீதுராஜா, ஸ்டாலின், ஆரோக்கியம், பரமசிவம், சோமு, பிச்சை உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தலித் விடுதலை இயக்கம் சார்பில் இயக்கத்தின் அணி தலைவர் தாவீதுராஜாவை வேட்பாளராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: