பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மத்திய, மாநில அரசை அகற்றுங்கள்

உடன்குடி, மார்ச் 22: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டுமென தண்டுபத்தில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி பேசினார்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம், தண்டுபத்தில் நடந்தது. திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர்கள் (இளைஞரணி) ஜோயல், (மாணவரணி) உமரிசங்கர், (மருத்துவரணி) வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் ராமநாதன், காங்கிரஸ் நிர்வாகிகள் ராம், சிவசுப்பிரமணியன், சந்திரசேகர், மதிமுக புதுக்கோட்டை செல்வம், மார்க்சிஸ்ட் அர்ச்சுணன், இந்திய கம்யூ. அழகுமுத்து பாண்டியன், கரும்பன், விசிக முரசுதமிழப்பன், பாராளுமன்ற பொறுப்பாளர் ராஜ்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமதுல்ஹசன், திக முனியசாமி, மமக ஆசாத், மஜக ஜாஹீர்உசேன், தவாக மாரிச்செல்வம், சமத்துவ மக்கள் கழகம் மாலைசூடி அற்புதராஜ், காமராஜ், ஆதித்தமிழர் கட்சி சுரேஷ், ஆதித்தமிழர் பேரவை காயல்முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிெமாழி கலந்து கொண்டு பேசியதாவது: பாஜ ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் சிறுபான்மையின மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. ஆணுக்கு நிகராக பெண்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். அதிகாரத்தில் இருப்பதற்காக மக்களை பாஜ சுரண்டுகிறது. ஆர்எஸ்எஸ்-ன் கைக்கூலியாக பாஜ செயல்படுகிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும், இந்த தேர்தலை பதற்றத்தோடும், பயத்தோடும் சந்திக்க வேண்டும். ஏனெனில் மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால், நாம் சந்திக்கிற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். அதன்பிறகு மாற்று கருத்துக்கள், கட்சியினரை ஒழிப்பதை சூளுரையாக எடுத்துக் கொண்டு செயல்படுவார்கள்.தேர்தல் நெருங்கி விட்டதால் தமிழகத்திற்கு அடிக்கடி ஓடி வருகிறார். நாமும் கோ பேக் மோடி, கோ பேக் மோடி என சொல்லி அலுத்து விட்டோம். ஆனால் தமிழகத்தை புயல்கள் தாக்கியபோதும், வறட்சி வாட்டியபோதும் அவரது கண்ணுக்கு தமிழகம் தெரியவில்லை. டெல்லி சென்று போராடிய தமிழக விவசாயிகளை தெரியவில்லை. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்று அந்த ஆலை நமக்கு எதிராக களமிறங்குகிறது. நாம் மக்களோடு நிற்பவர்கள். நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி மலரும். அப்போது இந்த அரசு கொலை செய்த 13 பேருக்கு உரிய நீதி விசாரணை வழங்கப்படும்.

பொள்ளாச்சியில் பாலியல் விவகாரத்தில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுகின்றனர். குற்றவாளிகளை காப்பாற்றவே அரசு துடிக்கிறது. இப்படிப்பட்ட கேவலமான அரசு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மத்திய, மாநில அரசை அகற்றுங்கள்.

பாஜ என்ன நினைக்கிறதோ அதைத்தான் இங்கே ஆட்சியில் இருப்பவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டு இப்போது மக்களை ஏமாற்றுவற்காக நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கை விடுக்கின்றனர். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாஜவை தோல்வியடையச் செய்ய வேண்டும். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராகிய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். இதில் திமுக மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி எஸ்.ஜே.ஜெகன், மகளிரணி ஜெசி பொன்ராணி, நெசவாளர் அணி மகாவிஷ்ணு, தொண்டரணி பிரபாகர், சுப்பிரமணியன், துணை அமைப்பாளர்கள் சிறுபான்மை பிரிவு சிராஜூதீன், வர்த்தக அணி ரவிராஜா, இளைஞரணி ஜனகர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராம், பொருளாளர் நடராஜன், உடன்குடி வட்டார காங். தலைவர் துரைராஜ் ஜோசப், வட்டார செயலர் திருமால், மாநில மகிளா காங். இணை செயலாளர் அன்புராணி, விசிக மண்டல பொறுப்பாளர் தமிழினியன், ஆதிதமிழர் மண்டல செயலாளர் அருந்ததி அரசு, ஒன்றிய செயலாளர்கள் திருச்செந்தூர் செங்குழி ரமேஷ், ஆழ்வை கிழக்கு நவீன்குமார், உடன்குடி பாலசிங், காயல்பட்டினம் முத்துமுகமது, பொதுக்குழு உறுப்பினர்கள் வசீகரன், முததுசெல்வன், சாகுல்ஹமீது, நகர செயலாளர்கள் சுடலை, ஜான்பாஸ்கர், கல்யாணசுந்தரம், ராமஜெயம், முருகப்பெருமாள், ரவிசெல்வகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: