×

மாதிரி வாக்குச்சாவடி அமைத்து சப் கலெக்டர் பயிற்சி

தக்கலை, மார்ச் 22: தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தல், மண்டல அதிகாரிகள் நியமித்தல், வாக்கு பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தல், வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட உள்ள ஊரியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியாக மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மண்டல அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், வாக்குச்சாவடியில் எத்தனை ஊழியர்கள் நியமிக்க வேண்டும், அங்கு அவர்கள் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பன குறித்தும் பத்மனாபபுரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைத்து சப் கலெக்டர் ஷரண்யா அறி பயிற்சி அளித்தார். இது குறித்து தாசில்தார்கள் எம்.வி.சஜித், சுப்பிரமணியம் ஆகியோர் விளக்கி கூறினர்.

Tags : polling station ,
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...