×

குமரி கோயில்களில் பங்குனிஉத்திர சிறப்பு வழிபாடு

நாகர்கோவில், மார்ச் 22: குமரி மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் பங்குனி உத்தரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பங்குனி உத்திர தினத்ைதயொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் தெய்வீக நட்சத்திரமாக கருதப்படுவது இதற்கு காரணம் ஆகும். பங்குனி உத்திர நாளில் சாஸ்தா வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பலருக்கு சாஸ்தா குலதெய்வமாக இருந்து வருகிறார். எனவே இந்த நாளில் தங்களது குலதெய்வத்தை வணங்குவதன் மூலம் மிகவும் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கும் முன்னோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பதும் ஐதீகம் ஆகும். பங்குனி உத்திரத்தை தொடர்ந்து நேற்று குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குலதெய்வ கோயில்களில் வழிபாடு நடத்த பக்தர்கள் திரண்டிருந்தனர். சில கோயில்களில் ஆடு, கோழி பலியிட்டும் வழிபாடுகள் நடைபெற்றன. இவற்றில் உறவினர்கள் ஒன்றுகூடி வழிபாடு நடத்தினர்.  வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது குலதெய்வ கோயில்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பஸ்களையும், அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது. பங்குனி உத்திரத்தை தொடர்ந்து, சிவன் கோயில்கள், முருகன் கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.

Tags : Marudha ,temples ,Kumari ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு