×

சாலையோரம் கிடந்த ஸ்மார்ட் கார்டுகள்

நாகர்கோவில், மார்ச் 22: தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் பயன்படுத்தி வந்த அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலம் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் ஸ்மாட் கார்டு மக்களின் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகி விட்டது. கோட்டார் ரயில் நிலையம் செல்லும் சாலையோரம் நேற்று ஸ்மார்ட் கார்டு குவியல்கள் கிடந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த ஸ்மாட் கார்டுகளை எடுத்தனர். பின்னர் அந்த கார்டுகளை அகஸ்தீஸ்வரம் வட்டவழங்கல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். சுமார் 30 ஸ்மார்ட் கார்டுகள் இருந்தன. அதில் 2 ஆதார் கார்டும் இருந்தன. ஸ்மார்ட் கார்டுகள் அனைத்தும் 2017ல் அச்சடிக்கப்பட்டவையாகும். அந்த ஸ்மார்ட் கார்டுகள் யாருடையது என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த ஸ்மார்ட் கார்டுகள் அங்கு எப்படி வந்தது. யாராவது கொண்டு போட்டு சென்றார்களாக என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மக்களவை தேர்தல் வரும் நிலையில் ஸ்மார்ட் கார்டுகள் சாலையோரம் கிடந்ததால், தேர்தலை புறக்கணிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் கார்டுகளை வீசிச்சென்றார்களாஎன்ற அடிப்படையிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் ஸ்மார்ட் கார்டுகள் கிடந்ததால், கோட்டார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...