×

குமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவு

நாகர்கோவில், மார்ச் 22: உலக வனநாள் விழா நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதனடிப்படையில் நாகர்கோவில், கொட்டாரம் அருகிலுள்ள அச்சன்குளத்தில் மாவட்ட வன அலுவலர் ஆனந்த் தலைமையிலும், கூடுதல் ஆட்சியர் ராஹூல்நாத் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அங்குள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மரம் வளர்ப்பு விழிப்புணர்வு குறித்த நிழற்படங்களை வழங்கி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கூறியதாவது: உங்களது அருகாமையில் உள்ள பகுதியில் யாரேனும் அனுமதியின்றி மரங்களை வெட்டினால், அருகிலுள்ள வனத்துறை அலுவலர்களுக்கு ெதரிவித்து மரம் வெட்டுவதை தடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மக்களாக இருக்கிறார்கள். நான் பிற மாவட்ட கலெக்டரிடம் பேசும்போது, எங்கள் மாவட்டத்தில் உள்ள மக்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் எளிதாக புரிந்து கொள்கிறார்கள், காரணம் 100 சதவீதம் கல்வியறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என பெருமையோடு சொல்லி கொள்வேன்.  தேர்தல் நாளையொட்டி அதிக விடுமுறை வருவதினால் வாக்காளர்கள் சுற்றுலா செல்வதோ அல்லது தொலைக்காட்சிகளில் புதிய திரைப்படங்களை பார்த்துக்கொண்டே இருந்து வாக்களிக்காமல் இருக்க கூடாது.

வாக்களிக்கும் தினமான ஏப்ரல் 18ம் தேதியன்று நீங்கள் உங்களுக்கு அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று நீங்கள் வாக்களிப்பதை, பூஜை செய்வதாக நினைக்கலாம். கோயிலுக்கு அல்லது சர்ச்சுக்கு அல்லது மசூதிக்கு செல்வதாக நினைத்து நீங்கள் வாக்களிக்க செல்ல வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல கடமையும் ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது மனதில் ‘நான் ஒருவன் வாக்களிக்காமல் இருந்தால் ஒன்றும் நடந்து விடாது’ என நினைக்ககூடாது. உங்களது வாக்கு ஒவ்வொன்றும் மிக அவசியமானது, ஜனநாயக கடமையானது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.   குமரி மாவட்டம் 100 சதவீதம் கல்வியறிவு உள்ள மாவட்டம் என்பது மட்டுமல்லாமல் 100 சதவீதம் வாக்கு பதிவான மாவட்டம் என்பதை பிற மாவட்ட மக்களுக்கு அறிய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மாவட்ட உதவி வன அலுவலர் ஷாநவாஸ், அச்சன்குளம், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த வன பாதுகாப்பு குழு உறுப்பினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kumari ,district ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...