×

ஆரல்வாய்மொழி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மாநில அளவிலான மாட்டு வண்டி போட்டி

ஆரல்வாய்மொழி, மார்ச் 22:  ஆரல்வாய்மொழி, பர கோடிகண்டன் சாஸ்தா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் நடைபெற்று வருகிறது. 7ம் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இந்த போட்டி ஆரல்வாய்மொழி-செண்பகராமன்புதூர் சாலையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் தட்டு வண்டி, வில்வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை தொழில் அதிபரும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பக்த சேவா சங்க தலைவருமான முத்துக்குமார் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் தாணப்பன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மேல்சாந்தி பாலசுப்ரமணிய சிவாச்சாரியார், மற்றும் பக்த சேவா சங்க நிர்வாகிகள் விநாயகம், இசக்கியப்பன், பெருமாள், பிச்சை, தாணு பிள்ளை, முத்துராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தட்டு வண்டியில் நல்லூர் பகுதியை சேர்ந்த முத்து, ஆனை பொத்தை நடேசன், பெத்தரங்கபுரம் வெள்ளையம்மாள், ஆகியோரது மாட்டு வண்டிகள் முதல் மூன்று இடத்தினை பெற்று பரிசை தட்டி சென்றன. வில்வண்டியில் புதியம்புத்தூர் ஜெர்லின்ராஜா மற்றும் செல்வம், வண்ணான்விளை குமரேசன் ஆகியோரது மாட்டு வண்டிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி மாட்டு வண்டி சங்க தலைவர் வேலப்பன், செயலாளர் தாணப்பன், பொருளாளர் ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் சதிஷ், தண்டபாணி, சிவா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Maru Uthiram Festival ,
× RELATED ஊத்தங்கரையில் பங்குனி உத்திர திருவிழா