×

கிருஷ்ணன்கோயில் சித்திரை திருவிழா கால்நாட்டு

நாகர்கோவில், மார்ச் 22:  நாகர்கோவிலில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோயில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 10ம் தேதி கொடியேற்றுவிழாவுடன்  தொடங்குகிறது. விழாவில் 18ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. 19ம் தேதி தெப்ப திருவிழாவும், தினசரி காலை, மாலை சுவாமி வாகன பவனி, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவையொட்டி நேற்று கோயில் வளாகத்தில் கால்நாட்டுவிழா நடைபெற்றது. இதில் கோயில் மேலாளர் வெங்கடேசன், கிருஷ்ண பக்த சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கிருஷ்ண பக்த சேவா டிரஸ்ட் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.

Tags : festival festival ,
× RELATED அந்தியூர் குருநாதசாமி கோயில் ஆடி தேர்...