விவேகானந்தா கல்லூரிகளில் இலவசமாக படிக்க அறிவுத்திறன் தேர்வு

திருச்செங்கோடு, மார்ச் 22: திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதி கூறியதாவது: பொருளாதார சூழ்நிலை இல்லாத மாணவிகள், உயர்கல்வி வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்பதற்காக அறிவுத்திறன் தேர்வு நடத்தி, ஆண்டிற்கு சுமார் ₹3 கோடிக்கு மேல் இலவசக் கல்வி மற்றும் கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை ₹33 கோடி இலவசக் கல்வி மற்றும் கட்டணச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வசதியற்ற, பெற்றோரை இழந்த பிளஸ் 2 மாணவிகள், இளங்கலை, டிப்ளமா, விளையாட்டில் சிறந்த மாணவிகள், பொறியியல், கலை அறிவியல் கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புக்கள், எம்ஏ, எம்பிஏ, எம்எஸ்சி, எம்சிஏ படிப்பில் சேர்வதற்கான அறிவுத்திறன் தேர்வுகள் வரும் 24ம் தேதி திருச்செங்கோடு எளையாம்பாளைத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து, 31ம் தேதி சங்ககிரி வீராச்சிபாளையம் கல்லூரி வளாகத்திலும், திண்டுக்கல், திருவாரூர், பட்டுக்கோட்டை, திருக்கோவிலூர், தர்மபுரி, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, கோவில்பட்டி ஆகிய ஊர்களிலும் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 6ம் தேதி கன்னியாகுமரி மார்த்தாண்டத்திலும், 7ம் தேதி தேனி ராயப்பன்பட்டி, வாணியம்பாடி, வடலூர், தூத்துக்குடி, ஒசூர், கிருஷ்ணகிரி, கடையநல்லூர், திருச்சி, அறந்தாங்கி,  ஆண்டிப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள மையங்களிலும் தேர்வு நடக்கிறது. தேர்வு எழுதும் அனைத்து மாணவிகளுக்கும் கட்டணச்சலுகை உள்ளது. மாணவிகளின் வசதிக்காக முக்கிய நகரங்களில் இருந்து கல்லூரிக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆங்கில அறிவு, பொது அறிவு, படித்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: