×

டிரினிடி மகளிர் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல், மார்ச் 22: நாமக்கல் டிரினிடி கல்லூரியுடன், சோனா யுக்தி மற்றும் ஹையர்மீ ஆகிய நிறுவனங்கள் இணைந்து, வேலை வாய்ப்பு முகாமை நடத்தின. முகாமை, கல்லூரி தலைவர் செங்கோடன் தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் லட்சுமி நாராயணன் வரவேற்றார். கல்லூரி வேலை வாய்ப்பு இயக்குநர் மனோகரன், சோனா யுக்தி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர்கள் விஜயானந்த் மற்றும் ஆசிப் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில் டெக்னாலஜீஸ், ஏவியான், காலிபர், ஐடிபிஐ பெடரல், ஈக்விடாஸ், இந்துஜா உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு வங்கி, நிதியியல், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், உணவு உற்பத்தி, மின்னியல், மின்னணுவியல், சந்தையியல், மேலாண்மை, நிர்வாகம், பொறியியல், காப்பீடு, சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தினர். முகாமில் நாமக்கல், திருச்சி, கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக 400க்கும் மேற்பட்டவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டது. டிரினிடி கல்லூரி செயலர் நல்லுசாமி, மெட்ரிக் பள்ளி தலைவர் குழந்தைவேல், அகாடமி பள்ளி செயலர் சந்திரசேகரன், கல்லூரி நிர்வாக அலுவலர் செந்தில்குமார், வேலை வாய்ப்பு துறை பொறுப்பாளர்கள் சுதா, உஷாராணி, கவிதா, சத்யசங்கரி, சித்ரா, மைதிலி, லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Workshop Camp ,Trinity Women's College ,
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு