×

நாடாளுமன்ற தேர்தலில் துரோகியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

நாமக்கல், மார்ச் 22: துரோகிகளை வீட்டுக்கு அனுப்பும் வகையில், அதிமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என நாமக்கல்லில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், மின்துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.
 நாமக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், நேற்று மாவட்ட அவைத்தலைவர் சுந்தரம் எம்பி தலைமையில் நடந்தது. பாஸ்கர் எம்எல்ஏ வரவேற்று பேசினார். கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் காளியப்பனை அறிமுகம் செய்து வைத்து அமைச்சர் தங்கமணி பேசியதாவது: நாட்டை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியால் மட்டும் தான் முடியும். நாட்டின் பாதுகாப்பு கருதியே பாஜவுடன், அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் துரோகியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கேற்ப கட்சியினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும். நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும். அந்த தேர்தலில் நாம் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். அதிமுகவினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் சரோஜா, சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், எம்எல்ஏ, தமாகா மாவட்ட தலைவர் இளங்கோ, பாஜக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : traitor ,election ,home ,
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...