×

நாமக்கல்லில் இன்று நரசிம்ம சுவாமி கோயில் தேரோட்டம்

நாமக்கல், மார்ச் 22: நாமக்கல் நரசிம்ம சுவாமி, நாமகிரி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேரோட்டம் நடைபெறும். கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், தினம்தோறும் சிம்மம், அன்னம், கருடன், யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. கடந்த 20ம் தேதி நரசிம்ம சுவாமிக்கும், நாமகிரி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று(22ம் தேதி) காலை கோட்டை பகுதியில் உள்ள நரசிம்ம சுவாமி தேரும், மாலையில் கடைவீதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கும், ரங்கநாதர் சுவாமிக்கும் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : Narasimha Swamy Temple ,Namakkal ,
× RELATED சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில்...