×

நாமக்கல்லில் ₹31 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், மார்ச் 22: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 1,533 மூட்டை  பருத்தி ₹31 லட்சத்துக்கு ஏலம் போனது. நாமக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,533 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். திண்டுக்கல், பழனி, கோவை, ஈரோட்டை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில், ஆர்சிஎச் ரகம் ஒரு குவிண்டால் ₹5,210 முதல் ₹6,193 வரை ஏலம் போனது. டிசிஎச் ரகம் ஒரு குவிண்டால் ₹6,420 முதல் 7,007 வரை ஏலம் போனது. மொத்தம் 1,553 மூட்டை பருத்தி ₹31 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

Tags : Cotton auction ,Namakkal ,
× RELATED பொதுக்கூட்டம் நடத்த 48 மணி நேரத்துக்கு முன் அனுமதி அவசியம்