×

சேந்தமங்கலத்தில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம்

சேந்தமங்கலம், மார்ச் 22: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சந்திசேகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, எம்பி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு, வேட்பாளர் காளியப்பனை அறிமுகம் செய்து வைத்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : coalition party activists ,AIADMK ,Senthamangalam ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை