குடந்தையில் விற்பனைக்காக போதை பவுடர் வைத்திருந்தவர் கைது

கும்பகோணம், மார்ச் 22: கும்பகோணத்தில் விற்பனைக்காக போதை பவுடர வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் பகுதியில் போதை பவுடர் விற்பனை செய்து வருவதாக மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கும்பகோணம் பிர்மன்கோயில் ஆற்றங்கரை பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது போஸ் மகன் அன்பு (எ) அன்புரோஸ் (40) என்பவர் 750 கிராம் டைபீபாம் போதை பொருளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அன்புரோசை கைது செய்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விற்பனைக்காக சாராயம் வைத்திருந்த 5 பேர் கைது: கும்பகோணம் பிர்மன் கோயில் அரசலாற்றங்கரையில் வெளிமாநில சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்காக வெளிமாநில சாராயம் வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (32),  நாகராஜ் (31), கருணாநிதி (50), மகேந்திரன் (56), ஜெய்கிருஷ்ணன் (50) ஆகிய 5 பேரை கைது செய்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: