×

பாபநாசம் பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அரசின் உத்தரவு காற்றில் பறக்கும் அவலம்

பாபநாசம், மார்ச் 22: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தும் பாபநாசம் பகுதியில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பிளாஸ்டிகள் பொருட்கள் குறைந்த பாடில்லை. எங்கு பார்த்தாலும் பாபநாசம் பகுதியில் குப்பைகள் குவிந்து கிகடக்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஹோட்டல்களில் சூடான சாம்பார் உள்ளிட்டவை இன்னும் பிளாஸ்டிக் பையில் தான் கட்டி தரப்படுகிறது. இதனால் கேன்சர் வரும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. எனவே பாபநாசம் பகுதியில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் தான் குவிந்து கிடக்கிறது. தமிழக அரசின் அறிவிப்பு காற்றில் பறக்க விடும் நிலையில் உள்ளது. எனவே கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுகிறதா, ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பை பயன்படுத்தப்படுகிறதா,  
டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் கப் உபயோகம் உள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்ைக எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Tags : area ,Papanasam ,state ,
× RELATED பாபநாசம் தாலுகா பகுதிகளில் குறுவை...