×

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 1,691 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற 11,769 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு

தஞ்சை, மார்ச் 22: தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 1,691 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 11,769 பேரை கணினி மூலம் குலுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி என்று 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் என்று 3 சட்டமன்ற தொகுதிகளில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெறுகிறது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தஞ்சை சட்டமன்ற தொகுதியில் 1,30,852 ஆண் வாக்காளர்கள், 1,40,892 பெண் வாக்காளர்கள், 55 இதர வாக்காளர்களும் வாக்களிப்பதற்காக 286 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவையாறு சட்டமன்ற தொகுதியில் 1,24,713 ஆண் வாக்காளர், 1,28,991 பெண் வாக்காளர், 4 இதர வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக 307 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் 1,12,244 ஆண் வாக்காளர், 1,16,635 பெண் வாக்காளர், 5 இதர வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,11,419 ஆண் வாக்காளர், 1,20,049 பெண் வாக்காளர், 21 இதர வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக 271 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் 1,93,450 ஆண் வாக்காளர், 1,08,929 பெண் வாக்காளர், 6 இதர வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 260 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 1,21,289 ஆண் வாக்காளர், 1,26,818 பெண் வாக்காளர், 6 இதர வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 282 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 7,03,967 ஆண் வாக்காளர், 7,39,314 பெண் வாக்காளர், 97 இதர வாக்காளர்கள் என்று மொத்தமாக 14,43,378 வாக்காளர்கள் வாக்களிக்க 1691 வாக்குச்சாவடி மையங்கள் அமைய பெற்றுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் தலைமை அலுவலர், மண்டல அலுவலர், நிலைய அலுவலர் என்று 11,769 பேர் பணியாற்றவுள்ளனர். இவ்வாறு பணியாற்ற உள்ள அலுவலர்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த பணியை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். இவ்வாறு கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்த அலுவலர்களுக்கு விரைவில் பணி சான்று வழங்கப்படும்.

Tags : constituency ,polling centers ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...