பசுபதிகோவில்- கண்டியூர் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பையால் துர்நாற்றம் வாகன ஓட்டிகள் அவதி

பாபநாசம், மார்ச் 22: பாபநாசம் அடுத்த பசுபதிகோவில்- கண்டியூர் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பையால் ஏற்படும் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாபநாசம் அருகே பசுபதிகோவில்- கண்டியூர் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பகைளை உடனுக்குடன் அகற்றாததால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறார். இதனால் பொதுமக்கள் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பசுபதிகோவில்- கண்டியூர் சாலை திருவையாறு செல்லும் பிரதான சாலையாகும்.

இந்த சாலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி சாலையோரங்களில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். மேலும் தினம்தோறும் குப்பையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: