திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாபநாசம், மார்ச் 22: பாபநாசத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் முன்னிலை வகித்தார். வேட்பாளர் ராமலிங்கம் பேசும்போது, நான் வெற்றி பெற்று விடுவேன் என்று பொதுமக்கள் பேசுவது எனக்கான அங்கீகாரம். இந்த தொகுதியின் வேட்பாளர் நீங்கள் தான். உங்களது ஆதரவால் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார். பாபநாசம் ஒன்றிய அவைத்தலைவர் யூசுப் அலி, பாபநாசம் ஒன்றிய அவைத்தலைவர் துரை, ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன், பொருளாளர் கணேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: