×

பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

போச்சம்பள்ளி, மார்ச் 22: பங்குனி உத்திரப்பெருவிழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை மற்றும் காவடி ஊர்வலம் நடந்தது. இதையொட்டி, போச்சம்பள்ளி கருமலை நடுபழனி ஆண்டவர் கோயிலில் நேற்று காலை சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இரவு திரைப்பட புகழ் மாரியப்பனின் தில்லானா தில்லானா நடன நிகழ்ச்சி, வாணவேடிக்கை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இன்று(22ம் தேதி) காலை 10 மணிக்கு சேவல் ஏலம், இறைவன் முன்பு வரவு-செலவு கணக்கு வாசித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சாந்தமூர்த்தி, சாந்தி மாரியப்பன் மற்றும் விழாக்குழுவினர், ஊராட்சி பொதுமக்கள் செய்து வருகின்றனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் பால் காவடி, பால் கலசம், இளநீர் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு சண்முக பெருமானுக்கு அலங்கார ஆராதனை நடந்தது. ஊத்தங்கரை  காசி விஸ்வநாதர் கோயிலில் வள்ளி-தெய்வநாயகி சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

Tags : Devotees ,Lord ,Murugan Temple ,
× RELATED வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பங்குனி உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்