×

மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 22: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வண்ணப்பொடியை தூவியும், உற்சாக நடனமாடினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், குடும்பத்துடன் தங்கி இங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிந்தும், சொந்தமாக கடைகள் வைத்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு, வண்ண, வண்ண பொடிகளை ஒருவர் மீது மற்றொருவர் தூவியும், வண்ணப் பொடிகள் கலந்த தண்ணீரை ஒருவர் மீது மற்றொருவர் ஊற்றியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  மேலும் இனிப்பு வகைகளை ஒருவருக்கு ஒருவர் கொடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல், லாரிகளில் சரக்குகளை ஏற்றி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், இங்குள்ள வட மாநில இளைஞர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை கொண்டடினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட மாநில இளைஞர்கள் பணிபுரியக்கூடிய நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. வட இந்திய இளைஞர்கள் பலரும் நேற்று வண்ணப் பொடிகளை முகம், தலை, உடம்புகளில் பூசியப்படி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தனர்.

ஓசூர்: ஓசூரில் நேற்று காலை முதலே ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி ஹோலியை கொண்டாடினர். பாங்கு என்ற பானம் அளித்து மகிழ்ந்தனர். வட நாட்டவருடன் உள்ளூர் மக்களும் ஆடி, பாடினர்.
சூளகிரி:  சூளகிரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தங்களது குடும்பத்தினருடன் இப்பகுதியிலேயே நீண்ட காலமாக தங்கியுள்ளனர். இவர்கள் நேற்று காலை ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவியும், முகத்தில் வண்ணப்பொடியை பூசியும் சந்தோஷமாக கொண்டாடினர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் நடனமாடி அவர்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.

Tags : Holi festival celebration ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...