வேட்புமனு தாக்கல் துவங்கி 3 நாட்களாகியும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட ஒருவரும் மனுதாக்கல் செய்யவில்லை

தஞ்சை, மார்ச் 22: தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கி 3 நாட்களாகியும் இதுவரை ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாடாளுமன்றம், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது. அதன்படி தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் துவங்கியது. இதற்காக தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிருந்தன.

அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்பவருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேபோல் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு பெறப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் துவங்கி 3 நாட்களாகியும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான தஞ்சை ஆர்டிஓ சுரேஷிடம் இதுவரை ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Related Stories: