×

சூளகிரி பகுதியில் சுவர் விளம்பரம் செய்ய அரசியல் கட்சியினர் ஆர்வம்

சூளகிரி, மார்ச் 22:  திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் பெங்களூரு தொழிலதிபர் காருண்யா சுப்பிரமணியம் களம் இறங்குகிறார். இது தவிர சுயேட்சையாக பலர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், வேட்பாளர் பெயரை அறிவிக்கும் முன்னரே, கட்சியினர் தங்களது கட்சியின் சின்னத்தை மட்டும் சுவரில் வரைந்து வைத்திருந்தனர். தற்போது வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதால், சின்னத்துடன் கூடிய வேட்பாளரின் பெயர் எழுதும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக, கட்சியினரிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. அந்தந்த பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், சுவரை பிடித்து சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று கட்சி சின்னம், வேட்பாளர் பெயரை எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, சூளகிரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள குடியிருப்புகளில் அதிகளவில் சுவர் விளம்பரங்களை காண முடிகிறது.

Tags : parties ,area ,Suluggery ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...