×

மழைநீர் செல்லும் வரத்து வாரிகளில் ஆக்கிரமிப்பு தண்ணீரில்லாமல் வறண்டு கிடக்கும் குளங்கள்

ஆலங்குடி, மார்ச்.22: ஆலங்குடியில் உள்ள குளங்களுக்கு மழைநீர் செல்லும் வரத்துவாரிகள் ஆக்கிரமிக்க பட்டதால்தண்ணீர் இல்லாமல் குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துஆழ்குழாய் கிணறுகளில் கூட தண்ணீர் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நெடுவாசல், அன்னவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம், பள்ளத்திவிடுதி, வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, அரையப்பட்டி, வன்னியன்விடுதி, குப்பகுடி, கோவிலூர் உட்பட பல்வேறு பகுதிகளிலும், கறம்பக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட மாங்கோட்டை, நம்பன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் நெல், கரும்பு, சோளம், கடலை, எள், உளுந்து, வாழை, காய்கறிகள் மற்றும் பூக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை பொய்த்துபோனதால் குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு போனது. மேலும், இப்பகுதியில் பருவமழை முற்றிலும் குறையத்தொடங்கியதால், குளம் மற்றும் கண்மாய் பாசனத்தை நம்பி விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்தது.  இந்நிலையில், இப்பகுதி விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தனர்.மேலும், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.

இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள் சுமார் 600 அடி முதல் 1000 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகளை அமைத்து அதிலிருந்து நெல், கரும்பு, சோளம், கடலை, எள்,உளுந்து, வாழை, காய்கறிகள் மற்றும் பூ உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்தனர். ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாக நிலவிவந்த கடும் வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறுகள் தண்ணீறின்றி வறண்ட நிலையில், விவசாய நிலங்கள் அனைத்தும் விவசாயம் செய்ய முடியாமல் கருவேல மரங்கள் மண்டி கிடக்கின்றன. அத்தகைய நிலங்கள் தற்போது, ஆடு, மாடுகளை மேய்க்கும் மேய்ச்சல் நிலங்களாக மாறியுள்ளன. ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செட்டியார்குளம், வடகாடு முக்கம் பகுதியில் உள்ள சிவன்கோயில் குளம், கல்லுகுண்டுகரை குளம், பள்ளத்துவிடுதி பெரியகுளம், குப்பகுடி பெரியகுளம் ஆகிய குளத்திற்கும், கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட மாங்கோட்டை வையாபுரி குளம், காத்தான்விடுதி கோவிலான் குளம் என அதிக குளங்கள்உள்ளன. வறட்சி நிறைந்த பகுதியாக இருந்தாலும், எப்போதாவது பெய்யும் மழையால் இக்குளங்களில் தண்ணீர் நிரம்பியே இருக்கும்.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்குளிப்பதற்கு பயன்பட்டு வந்தது. மேலும் குளங்களில் தண்ணீர் இருந்ததால் நிலத்தடி நீர்மட்டம்குறையாமல் இருந்தது. இதனால் இப்பகுதியில் குடிநீர் பஞ்சம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால்கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனதால் குளங்கள் தண்ணீர் இல்லாமல்வறண்டு போனது. இந்நிலையில், இக்குளங்களுக்கு மழைநீர் செல்லும் அனைத்து வரத்து வாரிகளும்ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இதனால் குளங்களுக்கு மழைநீர் செல்ல வாய்ப்பே இல்லாமல்போய்விட்டது. இதனால் குளங்கள் தண்ணீர் வற்றியும், வறண்டும் போய்விட்டன.  குளங்களில்தண்ணீர் இல்லாமல் போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய் கிணறுகள் வறண்டுபோனதோடு இல்லாமல் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து ஆழ்குழாய் கிணறுகள் கூட தண்ணீர்இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் குளங்களிலும் தண்ணீர் இல்லாமலும், வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் குறைந்தும் போனதால், பொதுமக்கள் பெரும்தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த ஆக்கிரமிப்பகளால் ஏற்கனவே பெய்தமழைநீர் குளங்களுக்கு சென்றடையவில்லை. ஆனால் இதுகுறித்து தகவல் தெரிந்தும் அதிகாரிகள்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் விதமாக இனிவரும் காலங்களில் வரவிருக்கும்மழைநீரை குளங்களில் சேமிக்கும் வகையில் குளங்களை சுத்தம் செய்தும், ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுள்ள வரத்து வாரிகளை மீட்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா