×

மரகத தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திரம் கோலாகலம்

செய்யூர், மார்ச் 22: சித்தாமூர் அடுத்த பெருக்கரனை கிராமத்தில் பிரசித்தி பெற்ற நடுபழனி ஸ்ரீ சித்திவிநாயகர் ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் படிவிழா மற்றும் பங்குனி உத்திர விழா கோலாகலமாகநடக்கும். இதையொட்டி 42ம் ஆண்டு படிவிழா மற்றும் 53ம் ஆண்டு பங்குனி உத்தி விழா கோலாகலமாக நடந்தது. இதைதொடர்ந்து, மரகத தண்டாயுதபாணிக்கு பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனைகளும், சந்தன அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 20ம் தேதி தேரோட்டமும், படிவிழாவும் நடந்தது.

பங்குனி உத்திர விழாவையொட்டி நேற்று தண்டாயுதபாணிக்கு மகா அபிஷேகம் நடந்தது.  இதில்ல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் காவடி எடுத்து, அலகு குத்தி, மொட்டை அடித்து முருகப்பெருமானை வழிப்பட்டனர்.
அதனை தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானையுடன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களிடையே எழுந்தருளி திருவீதியுலா வந்து காட்சியளித்தார். விழாவில் சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மரகத தண்டாயுதபாணியை வழிப்பட்டு சென்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Marumkada Thandayuthapani Temple ,
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...