×

உரிய ஆணவம் இல்லாமல் கொண்டு சென்றபோது மாவட்டம் முழுவதும் வாகன சோதனை 3 நாட்களில் ₹3.25 கோடி பறிமுதல்

காஞ்சிபுரம், மார்ச் 22: காஞ்சிபுரம் மாவட்த்தில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய அதிரடி வாகன சோதனையில் ₹3 கோடியே 12 லட்சத்து 73 ஆயிரத்து 370  பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டருமான பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் ஷிப்ட் முறையில் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணிநேரமும் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டையில் காஞ்சிபுரம் தொகுதி பறக்கும்படை அதிகாரிகள் நேற்று முன்தினம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த சுந்தரமூர்த்தி என்பவரை, மறித்து சோதனை செய்தனா். அப்போது, பைக் பெட்டியில், உரிய ஆவணங்கள் இல்லாமல், ₹97 ஆயிரம் எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனா். இதேபோல், செங்கல்பட்டு பகுதியில் நடத்திய வாகன சோதனையில், செங்கல்பட்டு தொகுதி பறக்கும்படை அதிகாரிகள், பழனிவேல் என்பவரின் காரை சோதனையிட்டனர். அதில் ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ₹1.26 லட்சதம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதி பறக்கும்படை அதிகாரிகள், மதுராந்தகத்தில் தீவிர வாகன சோதனை நடத்தி ₹ 2.21 லட்சம், உத்திரமேரூர் அருகே பெருநகர் மானாம்பதி பகுதியில் உத்திரமேரூர் தொகுதி பறக்கும்படை அதிகாரிகள் ₹2.5 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், ஒரே நாளில் சுமார் ₹7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் செய்யூர் தொகுதி பறக்கும்படை அதிகாரிகள், அப்பகுதியில் ஆவணங்கள் இன்றி வங்கிக்கு எடுத்து சென்ற ₹3 கோடியே 2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதுபோல், 12 இடங்களில் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய அதிரடி வாகன சோதனையில் ₹3 கோடியே 25 லட்சத்து 38 ஆயிரத்து 370 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவது மட்டுமின்றி, 8000 லிட்டர் எரிசாராயம் மற்றும் ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதளும் செய்யப்பட்டது.

வெடிமருந்து ஏற்றி வந்த வேன் விடுவிப்பு
தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் தேர்தல் ஆணையம் பறக்கும்படை அமைத்து, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி, பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய, பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு 3 தனிப்படைகள் அமைத்து முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதைதொடர்ந்து, பெரும்புதூர் சிறப்பு தாசில்தார் ரமணி தலைமையில் முடிச்சூர் அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகரில் போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மினி கன்டெய்னர் வேன் வந்தது. அந்த வேனை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அதில், 15 அட்டை ெபட்டிகளில் தலா 25 கிலோ எடையுள்ள வெடிமருந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அந்த வேனை சோமங்கலம் காவல் நிலையம் கொண்டு ெசன்று விசாரணை நடத்தினர். இதில் ஒரகடம் அடுத்த நாட்டரசன்பேட்டை குடோனில் இருந்து தாம்பரம் அருகே எட்டயபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரிக்கு வெடி மருந்து கொண்டு ெசன்றது ெதரியவந்தது. அரசின் அனுமதியுடன் கல்குவாரிக்கு தினமும், வேனில் வெடிமருந்து கொண்டு ெசல்வது தெரியவந்தது. மேலும், வேன் டிரைவர் லாரன்சிடம், அதற்கான அனுமதி சீட்டு இருந்தது. இதையடுத்து அவதிகாரிகள், அதனால் வேனை அதிகாரிகள் விடுவித்தனர்.

ஐம்பொன் சிலை சிக்கியது
சென்னை தி.நகரை சேர்ந்தவர் ஞானாம்பாள். கும்பகோணத்தில் 18 கிலோ எடையில் ஐம்பொன்னானாலான காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரேசேகரேந்திரர் உருவச்சிலை செய்துள்ளார். இந்த சிலையை காஞ்சி சங்கர மடத்தில் வைத்து ஆசீர்வாதம் பெறுவதற்காக நேற்று எடுத்து வந்தார். காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில், காஞ்சிபுரம் தொகுதி பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, உரிய ஆவணங்கள் இல்லாமல், சிலையை கொண்டுவந்ததாக கூறி பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் சென்னை திருவான்மியூரை சேர்ந்த சுந்தர்ராஜன் (50). புரோகிதர். இவர், புரோகிதம் செய்வதற்காக 2 பேரிடம் தலா ₹ 60 ஆயிரம் வீதம் 1.2 லட்சம் வாங்கியுள்ளார். மேலும், அவர் வைத்திருந்த ₹4 ஆயிரத்தையும் சேர்த்து ₹1 லட்சத்து 24 ஆயிரத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரத்தில் ஆவணங்கள் இன்றி அரிசி ஆலை உரிமையாளர் எடுத்து வந்த ₹5 லட்சம், உத்திரமேரூர் அடுத்த தண்டரையில் ஆவணங்கள் இன்றி சவுடு மண் நிறுவனம் எடுத்து வந்த ₹7.65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

குட்கா பொருட்களும் தப்பவில்லை
பெரும்புதூர் - தாம்பரம் சாலையில் மணிமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தனிக்கையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, தாம்பரம் நோக்கி வந்த ஒரு காரை மறித்து சோதனை
செய்தனர். அப்போது, 4 மூட்டைகளில் குட்கா பொருட்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ₹1.48 லட்சம் இருந்தது. இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, கார் டிரைவர் மணிகண்டன் மற்றும் ₹2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...