×

தேர்தல் முடிவு வெளியான நாளிலிருந்து 30நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்

பெரம்பலுார், மார்ச்22: தேர்தல் முடிவு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக் குள் தேர்தல் செலவின் கணக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வேட்பாளர் களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தலுக்காக மேற் கொள்ளப்படும் செலவினம், வேட்புமனு தாக்கல் செய்யும் நாளிலிருந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை மேற்கொள்ளப்பட்ட செலவினம் வேட் பாளரின் தேர்தல் செலவுக்கணக்காக கருதப்படும். பொதுகூட்டங்கள், சுவரொட்டிகள், தட்டிகள், வண்டிகள், செய்தித்தாள் அல்லது மின்னணு ஊடகத்தில் விளம்பரங்கள் போன்ற பிரசாரங்களும், வாக்காளர்களை கவரும் நோக்கத்துடன் அவர்களுக்கு பணம், மது அல்லது பரிசு மற்றும் வேறு பொருட்களை வழங்குவதும் வேட்பாளரின் செலவு கணக்கில் அடங்கும். தேர்தல் முடிவு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவின் உண்மை யான கணக்கை அளிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட வாகன பயன்பாட்டிற்கான அனுமதியினை வாகனத்தின் முன்பக்கத்திரையில் காட்சிக்கு தெரியுமாறு வைக்க வேண்டும். மேலும் அனைத்து பதிவேடு, தேர்தல் பிரசார காலத்தில் குறைந்தது மூன்று முறையாவது தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அனைத்து பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் வீடியோ மூலம் கண்காணிக்கப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வேட் பாள ரின் தேர்தல் செலவினங்கள் குறித்து கண்காணிக்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது