×

காஞ்சிபுரம், பெரும்புதூர் மக்களவை தொகுதிகளுக்கு 3வது நாளாக வெறிச்சோடிய கலெக்டர் அலுவலகம்

காஞ்சிபுரம், மார்ச் 22: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி 3 நாட்களாகியும் இதுவரை ஒருவர் கூட வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால், கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தமிழகத்தில் 2ம் கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு கடந்த 19ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனுவை பெறும் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி 3 நாட்களாகியும் நேற்று மணிவரை சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஒருவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனுத்தாக்கல் செய்ய மார்ச் 26 வரை காலக்கெடு இருந்தாலும், மார்ச் 23, 24 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாகிவிட்டன. பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இன்று வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மக்கள்நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உள்பட ஒரு வேட்பாளரும் நேற்று மாலை 3 மணிவரை வேட்பு மனுத்தாக்கல் செய்ய வராததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Kanchipuram ,constituencies ,Lok Sabha ,
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான 2ம் கட்ட பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது..!!