×

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அகோரமூர்த்திக்கு 1008 சங்காபிஷேகம்

சீர்காழி, மார்ச் 22: நாகை மாவட்டம், சீர்காழி அருகே  திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பாள் உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம். இந்த அகோர முர்த்தி சுவாமியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இவரது சன்னதியில் அஷ்ட (எட்டு) பைரவர்கள் இருப்பது விஷேமான கருதப்படுகிறது. இவரின் உடலில் கபாளம், ஈட்டி, கத்தி, ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளது விஷேசமானதாகும். அகோர முர்த்தி சுவாமியை வழிபட்டால் எதிரிகளால் எற்படும் பல்வேறு தோஷங்கள் நீங்குவதாக ஜதீகம்.
இவருக்கு கடந்த 10ம்தேதி லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்றது. லட்சார்ச்சனை முடிவடைந்ததையொட்டி நேற்று முன்தினம் இரவு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி சங்குகள் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் மேள தாளம் முழங்க சங்குகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லபட்டு அபிஷேகம் நடந்தன. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி முருகன், உபயதாரர் வக்கீல் சந்திரசேகரன், திருஞானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Ayooramurthy ,Swetharanyeswarar temple ,
× RELATED திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் இந்திர பெருவிழா கொடியேற்றம்