×

காரைக்காலில் கல்லூரி மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

காரைக்கால்,  மார்ச் 22: காரைக்கால் மாவட்ட தேர்தல் துறையின் சுவீப் அமைப்புடன்,  காரைக்கால் அன்னை தெரசா கல்லூரி மாணவிகள் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு  பிரசாரத்தை மேற்கொண்டனர். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி,  காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி  வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் துறையோடு இணைந்து இயங்கும் ஸ்வீப்  என்ற அமைப்பு பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தேர்தல்  துறையின் கட்டணம் இலல தொலைபேசி எண் 1950, சி.விகில் மற்றும் வி.பாட்  தேர்தல் எந்திரத்தின் முக்கியத்துவம், வாக்களிப்பதின் அவசியம், வாக்கை  விற்கக் கூடாது. குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

நேற்று  சுவீப் அமைப்புடன் காரைக்கால் அன்னை தெரசா கல்லூரி மாணவிகள் இணைந்து,  காரைக்கால் புதிய பேருந்து நிலையம், பாரதியார் சாலை உள்ளிட்ட  பகுதிகளில், தேர்தல் துறையின் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1950, சி.விகில்  மற்றும் வி.பாட் தேர்தல் எந்திரத்தின் முக்கியத்துவம், வாக்களிப்பதின்  அவசியம் குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்து, துண்டு பிரசுரங்களை  வழங்கினர். நிகழ்ச்சியில் சுவீப் அதிகாரி லட்சுமிபதி மற்றும் பலர் கலந்து  கொண்டனர்.

Tags : College students ,campaign awareness campaigns ,Karikal ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...