×

சீர்வரிசையுடன் அழைப்பிதழ் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு

திருவள்ளூர், மார்ச் 22: திருவள்ளூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில், மேள தாளங்கள் முழங்க சீர்வரிசையுடன் சென்று தேர்தல் திருவிழா அழைப்பிதழ்களை, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பொதுமக்களுக்கு வழங்கினார் திருவள்ளுர் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில், மேளதாளம் முழங்க மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் சென்று, பொது மக்களுக்கு தேர்தல் அழைப்பிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், வாக்காளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை 528 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.  திருவள்ளுர் தாலுகா அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பாக 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் கலந்துகொண்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து அவர்கள் மேளதாளம் முழங்க சீர்வரிசைகளுடன் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வழிநெடுகிலும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பிச் சென்றனர். இப்பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவு அடைய பொதுமக்கள் அனைவரும் தவறாது வாக்குச்சவாடிக்கு வருகை தந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...