×

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்

திருவள்ளூர், மார்ச் 22: திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் 3,638 வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள, 15 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான நியமன பட்டியல் தயாரிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 16 லட்சத்து 5 ஆயிரத்து 908 ஆண்கள், 16 லட்சத்து 28 ஆயிரத்து 89 பெண்கள், இதரர் 706 என மொத்தம் 32 லட்சத்து 34 ஆயிரத்து 706 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது, 65 ஆயிரத்து 335 வாக்காளர்கள், பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். தகுதியான மனுக்களை பரிசீலித்து, கள ஆய்வு செய்து பட்டியல் தயாரிப்பு பணி தாலுகா வாரியாக நடந்து வருகிறது. தேர்தல் கமிஷன் அறிவித்ததும், துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மாவட்டம் முழுவதும் 3,638 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

வாக்குச்சாவடி அலுவலர் தலைமையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் 1, 2 மற்றும் 3 என நான்கு பேர் நியமிக்கப்படுவர். தேர்தல் பணியில், மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில், 15 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்து பணியாளர் பட்டியல் பெறப்பட்டு, வாக்குச்சாவடி அலுவலர் பட்டியல் தயாரிப்பு நடந்து வருகிறது. தேர்தல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை நியமிப்பதற்காக பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 80 சதவீத ஊழியர்கள் விவரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு, அவர்களுக்கான வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படும். அனைத்து ஊழியர்களின் விவரம் பதிவு செய்த பிறகு, தேர்தல் கமிஷன் ஒப்புதலுடன், வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் நிலை அலுவலர்கள் நியமிக்கப்படுவர் என்றார்.

Tags : Tiruvallur district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...