×

ம.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் சாதனையாளர்கள், ஆண்டு விழா

கரூர், மார்ச் 22: ம.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் சாதனையாளர்கள் விழா மற்றும் கலலூரி ஆண்டு விழா நடைபெற்றது. பிற்பகலில் துவங்கிய சாதனையாளர்கள் விழாவை தொடர்ந்து கல்லூரி ஆண்டுவிழாவும் நடைபெற்றது. சாதனையாளர்கள் விழாவில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் அசோசியேட் ஜெனரல் மேனேஜர் கன்சன்கேட்கர், கல்லூரி ஆண்டு விழாவில் பிரபல ஊடகவியலளர் கோபிநாத் சந்ரன் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக நடைபெற்ற சாதனையாளர்கள் விழாவில் பல்வேறு நிறுவனங்களில் பணி நியமன ஆணை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பல்வேறு பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. கல்லூரி ஆண்டு விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் கல்லூரி நிறுவனர் குமாரசாமி, கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் ரமேஷ்பட், நிர்வாக இயக்குனர் குப்புசாமி, கல்லூரி அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். விழாவில் திரளான மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Tags : M. Kumarasamy Engineering College ,Annual Festival ,
× RELATED பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல...