சர்வதேச சட்ட விதிகளை மீறி ஆஸ்திரேலியாவுக்கு 100 பேரை கப்பலில் அனுப்பியவர் கைது

சென்னை: உரிய ஆவணங்கள் இன்றியும், சர்வதேச விதிகளை மீறியும் கடல் வழியாக கப்பலில் 100 பேரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிய நபரை கேரளா போலீசார் சென்னையில் கைது ெசய்தனர். கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 100 பேரை எந்த வித பாஸ்போர்ட்டும் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக கடல் வழியாக படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக அனுப்பியதாக கேரளா போலீசார் வழக்கு பதிவு ெசய்து சிலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும், குற்றவாளிகளை ேகரளா தனிப்படை போலீசார் சென்னை ஆயிரம்விளக்கு போலீசார் உதவியுடன் தேடி வந்தனர். அதன்படி ஆயிரம் விளக்கு போலீசார் குற்றவாளிகளின் செல்போன் எண்ணை வைத்து ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, கேளம்பாக்கம் சபாபதி நகரில் பதுங்கி இருந்த ஆறுமுகம் (43) என்பவரை அதிரடியாக நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

 மேலும், குற்றவாளியுடன் இருந்த நசரத்பேட்டை ஈவிகே தெருவை சேர்ந்த மாரிசெல்வன் என்பவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, 100 அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிய வழக்கில் மாரிசெல்வத்திற்கு எந்த தொடர்பும் இல்லாதது தெரியவந்தது. அதை தொடர்ந்து மாரிசெல்வத்தை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய ஆறுமுகத்தை கேரளா மாநிலம் எர்ணாகுளம் வடக்கன் குளம் தனிப்படை இன்ஸ்பெக்டர் பிஜிகுமாரிடம் ஆயிரம் விளக்கு போலீசார் ஒப்படைத்தனர்.  அதன்பிறகு குற்றவாளியை கேரளா போலீசார் ரயில் மூலம் ேநற்று அழைத்து ெசன்றனர்.

Related Stories: