வாக்காளர் பட்டியலில் குளறுபடி சோழிங்கநல்லூர் தொகுதிக்கு வத்தலக்குண்டு வாக்கு சாவடி

சென்னை: தொகுதி மாற்றம் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ததில், வெளியான வாக்காளர் பட்டியலில் கடைசி நேரத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணைய வெப்சைட்டில் பலர் விண்ணப்பம் செய்துள்ளனர். எபிக் எண் மூலம், வாக்காளர் பட்டியலை சரிபார்த்தால், அதில் கடைசி நேரத்தில் பல குளறுபடிகள் நடப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒருவர், மடிப்பாக்கத்துக்கு வீடு மாறியதால் முகவரி மாற்றத்துக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். எபிக் எண்(RTO1471895) மூலம் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது, அதில் 2 பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன. பல்லாவரம்  தொகுதியிலிருந்து வாக்காளர் பெயர் நீக்கப்படவில்லை. புதிதாக மாற்றப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் வாக்குச்சாவடியின் முகவரி திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் உள்ள பள்ளியின் முகவரி இடம் பெற்றுள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: