×

அதிமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் துண்டு அணிவிக்க வந்த தொண்டகளை ஆவேசமாக திட்டிய அமைச்சர் ஆம்பூரில் பரபரப்பு

ஆம்பூர், மார்ச் 22: ஆம்பூரில் நேற்று நடந்த அதிமுக கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தொண்டர் ஒருவரை அமைச்சர் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை அதிமுக சார்பாக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், தமிழக பத்திரபதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் கலந்து கொண்டனர். மேலும், அதிமுக கூட்டணியில் வேலூர் மக்களவை தொகுதிக்கு போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர் ஜோதி ராமலிங்கராஜா ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

அப்போது, ஆம்பூர், கென்னடிகுப்பத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் சம்பத், வேட்பாளர் ஜோதி ராமலிங்கராஜாவிற்கு துண்டு அணிவிக்க முயன்றார். அப்போது, மேடையில் இருந்தவர்கள் இப்போது துண்டு அணிவிக்காதீர்கள். கீழே இறங்கி செல்லுங்கள் என்றனர். வேட்பாளரும் இதையே கூறியதால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆவேசமான அமைச்சர் வீரமணி எழுந்து, கையை ஓங்கியபடி அந்த தொண்டரை திட்டி அங்கிருந்து போகும் படி கூறினார். இதைப்பார்த்த மேடையில் இருந்த சிலர் அமைச்சரை தடுத்து நிறுத்தி, சம்பத்தை மேடையில் இருந்து கீழே தள்ளி தாக்கினர். பின்னர், அமைச்சரை சமாதானம் செய்து அவரை இருக்கையில் அமர வைத்தனர். இதற்கிடையே அதே மேடையில் வேட்பாளருக்கு துண்டு அணிவிக்க வந்த மற்றொரு தொண்டரையும் மேடையில் இருந்து தள்ளி விடப்பட்டதால் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளர்களுக்கு தொண்டர்கள் துண்டு அணிவிக்க கூட அனுமதிக்காததால் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags : AIADMK ,candidate ,meeting ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...