×

மனைவியை பற்றி தவறாக பேசியதால் ஆத்திரம் பஸ் நிறுத்த சுவரில் மோதி காவலாளி கொடூரக் கொலை மைத்துனர் அதிரடி கைது

திருவலம், மார்ச் 22: மனைவியை பற்றி தவறாக பேசிய காவலாளியை பஸ் நிறுத்த சுவரில் மோதி கொலை செய்த அவரது மைத்துனரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த சேவூர் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் நேதாஜி(60), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மைத்துனர் சேவூர் சத்யாபுரத்தை சேர்ந்த அருள்(36), பெயின்டர். இவரது மனைவி தீனா(32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேதாஜியும், அருளும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பார்களாம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சேவூர் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து நேதாஜியும், அருளும் மது குடித்துள்ளனர். அப்போது குடிபோதையில் நேதாஜி, அருள் மனைவியின் நடத்தை குறித்து ஆபாசமாக பேசி அவரை திட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த அருள், ேநதாஜியை சரமாரியாக தாக்கி தலையை பிடித்து பஸ் நிறுத்த சுவரில் மோதினாராம். இதில் நேதாஜி மண்டை உடைந்து மயங்கி விழுந்தார். பின்னர், அங்கிருந்து அருள் தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ், எஸ்ஐ தருமன் சம்பவ இடத்திற்கு சென்று ேநதாஜியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நேதாஜி வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிந்து அருளை நேற்று அதிகாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியை பற்றி தவறாக பேசிய காவலாளியை சுவற்றில் மோதி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்...